.

Home » » சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் இந்த வாரம் !

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் இந்த வாரம் !


4. கொள்ளைக்காரன்

விதார்த் நடித்திருக்கும் இப்படம் பரவாயில்லை என்ற விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது. இப்படம் சென்ற வார இறுதியில் 87,800 ரூபா‌ய்களை வசூலித்துள்ளது. இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் இதன் மொத்த சென்னை வசூல் 28 லட்சங்கள்.

3. மௌனகுரு

சென்ற வார இறுதியில் 1.6 லட்சங்களை வசூலித்த இப்படம் ஆறு வாரங்கள் முடிவில் 1.47 கோடியை சென்னையில் வசூலித்துள்ளது.

2. வேட்டை

லிங்குசாமியின் இந்த லா‌ஜிக் இல்லா படம் பாக்ஸ் ஆஃபிஸில் பெ‌ரிய மே‌ஜிக் எதையும் நிகழ்த்தவில்லை. சுமாரான வசூல்தான். சென்ற வார இறுதியில் 25.9 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 2.6 கோடியை தனதாக்கியுள்ளது.

1. நண்பன்

மீண்டும் அதே முதல் இடத்தில் நண்பன். மற்ற இடங்களில் எப்படியோ... சென்னையில் படம் பட்டையை கிளப்புகிறது. இதன் சென்ற வார வசூல் 51 லட்சங்கள். இதுவரை இப்படம் 6.22 கோடிகளை வசூலித்துள்ளது.

Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved