பிரான்சில் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றால் அரசியலில் இருந்து விலகிக் கொள்கிறேன் என தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி தெரிவித்துள்ளார்.
பிரான்சில் அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் நிக்கோலஸ் சர்கோசி போட்டியிடுகிறார். ஆரம்பத்தில் இவருக்கு ஆதரவு அதிகமாக இருந்தது, ஆனால் தற்போது இவருடைய போட்டி வேட்பாளரான சோசலிசக் கட்சியைச் சேர்ந்த பிராங்கோய்ஸ் ஹோலாண்டேக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ம் திகதி நடைபெற உள்ள முதல் சுற்றுத் தேர்தலுக்கான மக்கள் கருத்துக் கணிப்பின்படி, ஹோலாண்டேக்கு மக்கள் ஆதரவு 2 புள்ளி அதிகமாகி 30 சதவிகிதமாக உயரும் எனவும், சர்கோசிக்கு ஒரு புள்ளி அதிகமாகி 28 சதவிகிதமாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கேட்ட பின் சர்கோசி அளித்த பேட்டியில் கூறுகையில், என் மீதான நம்பிக்கை மக்களிடம் குறையும் பட்சத்தில், நான் அரசியலில் இருந்து விலகிக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.
மேலும் மக்களுக்கு விருப்பமில்லை என்ற பட்சத்தில், மக்கள் தீர்ப்புக்குத் தலை வணங்கி விடைபெறுவேன் என்று தெரிவித்துள்ளார்.
