சீ பி கிண்ண ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின் நான்காவது போட்டி இன்றைய தினம் இடம் பெற்று வருகிறது.
அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கு அமைய துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் டேவிட் ஹசி 72 ஓட்டங்களையும், பீற்றர் பொரஸ்;ட் 66 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இந்த நிலையில், இந்திய அணிக்கு 270 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
