காசா பள்ளத்தாக்கில் இஸ்ரேலிய யுத்த விமானங்கள் மேற்கொண்ட பல தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலிய யுத்த விமானங்கள் குறைந்தது மூன்று முறை ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதல்களை உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேலிய இராணுவம், பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, துல்லியமாக மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
