வெள்ளவத்தை 37ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள மாடி வீட்டில் மரணமான பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சமரக்கோன் பண்டா தெரிவித்தார்
கடந்த புதன்கிழமை தொடர்மாடி வீட்டில் தீவிபத்து காரணமாக இரண்டு மரணங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், அங்கு இடம்பெற்ற மரணத்தில் ஒன்று கொலை என வைத்திய அறிக்கையில் ஊர்ஜிதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
68 வயதுடைய பி.கே.சத்தியநாதன் என்பவரும் 32 வயதுடைய சர்மிளா பாலசுப்பிரமணியம் ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.
மரணமான சர்மிளா பாலசுப்பிரமணியம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வைத்திய அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாகவும் சத்தியநாதன் என்பவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனவும் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரினது மரணங்களும் தற்கொலையாக இருக்கலாம் என முதலில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.