சிரியாவின் இரண்டாவது முக்கிய நகரான அலிப்போவில் இடம்பெற்ற இரு வேறு குண்டுத் தாக்குதலில் பாரிய சேதங்கள் இடம்பெற்றுள்ளதாக உள்ளுர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஆயுத குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்கள் காரணமாக சிரிய இராணுவ புலனாய்வுப் பிரிவின் வளாகம் பாரிய சேதத்திற்கு உள்ளாகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படைத்தரப்பினரும், பொது மக்களும் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாக அந்த தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தொடர்பான விபரங்களோ அல்லது எண்ணிக்கையோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஜனாதிபதி பஷார் அல் அசாட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் ஆரம்பமானது முதல், அலிப்போ நகரம் மிகவும் அமைதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று இடம்பெற்ற பிரிதொரு தாக்குதல் சம்பவத்தில் நூறுபேருக்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த வாரத்தில் இடம்பெற்ற மேலும் பல தாக்குதல் சம்பவங்களில் பலர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.