.

Home » » அஜித்தின் வில்லன் இப்போது விஜய்க்கும் வில்லன் ஆனார்...

அஜித்தின் வில்லன் இப்போது விஜய்க்கும் வில்லன் ஆனார்...


பில்லா-2 படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்து வரும் வித்யூத் ஜம்வால், இப்போது துப்பாக்கி படத்தில் விஜய்க்கும் வில்லனாக நடித்து வருகிறார். பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டிற்கு புதிய வரவாக வந்திருப்பவர் நடிகர் வித்யூத் ஜம்வால். இவர் இப்போது அஜித்தின் பில்லா-2 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படம் தான். ‌

ஒரே நேரத்தில் அஜித், விஜய் என்று இருவரது படங்களில் மாறி மாறி நடித்து வரும் வித்யூத், அந்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நான் உண்மையிலேயே ரொம்ப அதிர்ஷடக்காரன். அதனால் தான் ஒரே நேரத்தில் முன்னணி ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அஜித் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் ரொம்ப ஹாட்டான ஆளு, அதேசமயம் தான் செய்யும் எந்த வேலையிலும் முழு திருப்தி இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். அதேமாதிரி விஜய், ரொம்ப கூலான எனர்ஜிட்டிக் ஆளு. அதேசமயம் தான் ஒரு ஸ்டார் என்ற கர்வம் இல்லாதவர் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் தான், வித்யூத்திற்கு பாலிவுட்டில் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved