நடிகர் கார்த்தி, தன்னுடன் சகுனி படத்தில் நடிக்கும் நடிகை ப்ரணிதாவை ரொம்பவே புகழ்ந்து தள்ளுகிறார். சிறுத்தை படத்தில் கார்த்தியும், சந்தானமும் அடித்த லூட்டியைப் போல சகுனியிலும் பல லூட்டி காமெடி காட்சிகள் இருக்கின்றனவாம். சந்தானத்தின் காமெடியை பாராட்டியிருக்கும் நடிகர் கார்த்தி, படத்தின் நாயகி ப்ரணிதா குறித்து அளித்துள்ள பேட்டியில், தமிழ்சினிமாவில் தமிழ் பேசும் ஹீரோயின்களுக்கு ரொம்பவே பஞ்சம். சகுனி படத்தில் ப்ரணிதா சொல்றதை தமிழ்லேயே புரிஞ்சுகிட்டு நடிக்கிறார். அதுவே பெரிய சந்தோஷம்தானே, என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் எனக்கு ஜோடியாக நடிப்பது ப்ரணிதாவா? சந்தானமா? என்று கேட்கும் அளவுக்கு என் கூடவே இருந்து கலகலப்பூட்வார் சந்தானம், என்றும் கூறியிருக்கிறார் கார்த்தி.