மாலைத்தீவுக்கான இராணுவத் திட்டம் ஒன்றை தயார்படுத்தி வைத்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் பதவி விலகியதை; தொடர்ந்து, அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தம்மை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியே பதவி விலக செய்தாக, மொஹமட் நசீட் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட போதும், பின்னர் அது ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் மாலைத்தீவில் இராணுவ ரீதியான குழப்ப நிலைகள் ஏற்படுமாக இருந்தால், அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு திட்டம் ஒன்றை தயார் படுத்தியுள்ளதாக இந்தியா தெரிவத்துள்ளது.
இந்தியாவின் ஐ.பி.என் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
தேவை ஏற்படின் மாலைத்தீவு செல்ல படையினர் தயார்ப்படுத்தி வைக்கப்பட்டுள்ளமையை இந்திய கடற்படையினர் உறுதிப் படுத்தியுள்ளனர்.