தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.சுமந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
ஐக்கிய தேசிய கட்சி சார்பில், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்களசமரவீர, ஜெயலத் ஜெயவர்தன ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இதற்கிடையில் இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கும், எமது செய்திப்பிரிவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றது.