ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோயினாக அசின் நடிக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. நண்பன் படம் வெற்றிக்குப் பிறகு சிறிது காலம் ஓய்வில் இருக்கும் இயக்குனர் ஷங்கர், அடுத்த ஆக்ஷன் + த்ரில்லர் கலந்த கதை ஒன்றை இயக்குகிறார். அந்த படத்தில் சீயான் விக்ரம் (அ) தல அஜீத் நடிக்கலாம் என தெரிகிறது. சமீபத்தில் மும்பையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட அசின், இயக்குனர் ஷங்கரிடம் சிறிது நேரம் உடைரயாடல் செய்துள்ளார். அப்போது ஷங்கர் தனது அடுத்த படத்தில் நடிக்க அசினிடம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அசினும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.