விக்ரம் நடிக்கும் ராஜபாட்டையில் ஸ்ரேயா, ரீமாசென் இருவரும் இணைந்து விக்ரமுடன் நடனமாடுகின்றனர்.
சுசீந்திரன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் படம் ராஜபாட்டை. இப்படத்தை பி.வி.பி. சினிமாஸ் தயாரிக்கிறது.

படத்தின் இறுதிக் காட்சிக்கு ரூ.3 கோடி செலவிட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல. அரங்குகள், மற்ற செலவுகளை சேர்த்து ரூ.1 கோடி ஆகியிருக்கலாம்.
அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். அவருக்கு இன்னும் ஒரு கதை சொல்லி உள்ளேன். இப்படத்தில் விக்ரம் கனவு காண்பது போன்ற பாடல் காட்சியொன்று உள்ளது.
இதில் ஸ்ரேயா, ரீமாசென் இருவரும் நடிகைகளாகவே வந்து நடனம் ஆடுகின்றனர். இப்பாடல் காட்சி இத்தாலியில் படமாக உள்ளது. அடுத்து விஷ்ணுவை வைத்து படம் இயக்குகிறேன்.
எனக்கென்று தனிபாணி கிடையாது. வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல போன்ற வித்தியாசமான கதைகளை படமாக்குவதே எனது திட்டம் என்று கூறினார்.