பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் மெரீனா படத்திற்காக நா.முத்துகுமார் பாடல் எழுதியுள்ளார்.
சசிக்குமார் தயாரிப்பில் வெளியான படம் பசங்க. இப்படத்தை இயக்கியவர் பாண்டிராஜ் ஆவார்.
இப்படத்திற்காக கவிஞர் நா.முத்துக்குமார் பாடல் எழுதியுள்ளார். பாடலில் சென்னை மொத்தத்தையும் அடக்கியுள்ளார்.
சென்னைக்கடற்கரையின் அழகில் ஆரம்பித்து கூவம் நதியின் அசுத்தம் வரை உள்ள நிகழ்வுகளை இந்த பாடலில் சேர்த்துள்ளார்.
மேலும் சென்னையின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், சுண்டல் விற்கும் குழந்தைத் தொழிலாளர்கள், போக்குவரத்து நெரிசல், என இப்பாடல் வழியாக சென்னை முழுவதையும் சுற்றிக்காண்பிக்கிறார்.
தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து வந்து சென்னையில் வேலை பார்க்கின்றவர்கள் பண்டிகை சமயத்தில் சொந்த ஊருக்கு பறப்பார்கள். அந்த சமயத்தில் சென்னையின் வெறுமையைப் பற்றியும் நா.முத்துக்குமார் பாடல்வரிகளாக சேர்த்துள்ளார்.