.

Home » » புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன் :கருணா

புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன் :கருணா


தமிழீழ விடுதலைப் புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்த போவதாக மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளில் புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன்.
தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் வெளிப்படுத்துவேன். புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர்ந்த தலைவர்களுக்கு சர்வதேசம் அடைக்கலம் வழங்கி வருகின்றது.
சம்பந்தன் தரப்பு ஜெனீவா செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி மாளிகையிலிருந்து அவர்கள் கல் எறியக் கூடாது.
பிரபாகரன் மேற்கொண்ட போர்க் குற்றச் செயல்கள் மற்றும் அரசியல்வாதிகளை கொலை செய்த தகவல்கள் என்னிடம் இருக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன்.
மேற்கு நாடுகளில் வாழும் புலித் தலைவர்களின் பெயர் பட்டியல் என்னிடம் இருக்கின்றது என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved