தமிழீழத்தின் மைந்தனும் யாழிசையின் மன்னனுமான ஸ்ரான்ட்லி அவர்கள் அழகான தமிழ் வரிகளில் அழகிய பாடல்
எங்கள் இளையவர்களின் வளர்ச்சி எம் கையில் !
இந்த இளையவன் தமிழ் இசை உலகில் தனது காலடியை பலமாக ஊன்ருவான் என்பது திண்ணம்
வாழ்த்துக்கள் நண்பரே ,
தமிழின் அழகை பார்ப்போம்
இதயம் பேசும் மௌன மொழி - அது
உனையும் எனையும் இணைக்கும் வழி
அகமும் புறமும் இரண்டு விழி - அது
அன்பில் திளைத்திடும் காதல் மொழி
ஆதி முதல் காதல் தான் உண்மை
ஜாதி மத பேதம் இங்கில்லை
அன்பே இறைவனின் குணமது...
என் தாயுமாகினாய்
உயிர்க் காதலி நீயே - இந்த
ஜென்மம் கொண்ட பிறவிப் பயனும்
நீயே அன்பே...
வாழ்வென்பது ஒரே ஒருமுறை
வாய்ப்பும் வரும் ஒருதடவை - உண்மைக்
காதல் உன்னைத் தேடி நிற்குதே
வா வா என் நண்பனே
ஜாதி இன மத மொழி பேதம் இங்கின்றி
ஆடல் பாடல் ஊடல் உணர்தல் இவையொடு
இனிதின் நுகரும் இமையோர்க்கு இன்குரலாய்
எழில் கொள் இறைவனின் இந்திரவிழா
காமன்விழா வேனில்விழா
வசந்தவிழா காதலுக்கோர் திருவிழா
காலம் மாறிப்போகும் - வாழ்வின்
கோலம் சாயம் போகும் - உண்மைக்
காதல் கொண்ட நெஞ்சம் என்றும் ஓய்ந்து போகுமா?
வானின் நீலம் அற்றுப்போகும் - கடலில்
நீரும் வற்றிப்போகும் - காதல்
காயம் கொண்ட உள்ளம் மட்டும் ஆறாதம்மா...
ரோமியோவின் காதல் - லைலா
மஜ்னு கொண்ட காதல் - சாஜகானின்
தாஜ்மகாலாய் காதல் சின்னமானதே..
அன்பைச் சொல்லத் தூது
கோடி வார்த்தைக் ஈடு ஏது? - ரத்த
ரோஜா ஒன்றே காதல் சொல்ல போதுமானதே..
என் தாயுமாகினாய்...
தமிழன் காதலி தாய்த் தமிழாகிட ஏங்கிடும்
ஒரு சிறு கவிஞன் நான்
தமிழ்தான் எந்தன் காதலி என்றே
யாழிசை மீட்டிடும் கலைஞன் நான் - 2
இதயம் பேசும்...(1)
என்றும் அன்புடன்
ஈழத்தின் சிறுத்தைகள் ஈழம்போய்ஸ்