.

Home » » தமிழ்ச் சங்கம் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ.25 லட்சம் கேட்ட வடிவேலு

தமிழ்ச் சங்கம் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ.25 லட்சம் கேட்ட வடிவேலு


அமெரிக்காவில் தமிழ்ச் சங்கம் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நடிகர் வடிவேலு ரூ.25 லட்சம் கேட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நட்சத்திரமாக வைகைப் புயல் வடிவேலு இருந்தார்.

சமீபகாலமாக தமிழில் நடிகர் வடிவேலுக்கு வாய்ப்புகள் எதுவும் வர வில்லை.

இந்நிலையில் அமெரிக்காவில் தமிழ்ச் சங்கம் நடத்தும் விழா ஒன்றில் பங்கேற்க அழைப்பு வந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக நடிகர் வடிவேலுவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது தமிழ்ச் சங்கம் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரூ.25 லட்சம் கேட்டுள்ளதாக வடிவேல் மீது விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து விழாக் குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது, வடிவேலு ரூ.25 லட்சம் கேட்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

இவ்வளவு பணத்தை கொடுத்து வடிவேலுவை விழாவுக்கு அழைத்து வர யாருக்கும் விருப்பம் இல்லை. எனவே வடிவேலு இல்லாமலேயே விழாவை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved