மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான நெடுஞ்சாலையில் வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு முன்பாக வான் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்
இந்தவிபத்தில் முச்சநக்கரவண்டிச் சாரதியான வாழைச்சேனையைச் சேர்ந்த 44 வயதுடைய அலியார் அப்துல் ஹமீட் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மடடக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாசிக்குடாவிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற உல்லாசப் பயணிகளை ஏற்றிவந்த வானும் வாழைச்சேனை பொலிஸ்நிலைய சந்தியிலிருந்து வாழைச்சேனை பஸாரை நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டியுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

