.

Home » » இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை! முல்லை. வள்ளிபுனத்தில் சம்பவம்

இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை! முல்லை. வள்ளிபுனத்தில் சம்பவம்


முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வள்ளிபுனம் கிராமத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை 10. 00 மணியளவில் இடம்பெற்றுள்ள இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
அன்றைய தினம் வீட்டிலிருந்து குறித்த இளம் குடும்பஸ்தர் உணவு உட்கொண்டிருந்த வேளை புகுந்த இனந்தெரியாத நபரொருவர் இவரை கத்தியால் வெட்டியுள்ளார்.
கத்தி வெட்டுக்கு ஆளான குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலைலயில் கிளிநொச்சி அரச வைத்தியாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இவர் இடைவெளியில் உயிழந்துள்ளார்.
கொல்லப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தாமி மகேந்திரன் (வயது 32) என்பவராவார்.
இவரது சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்ம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved