.

Home » » இந்திய இராணுவத்தின் தென் பிராந்திய கட்டளைத் தளபதி இலங்கை வருகை?

இந்திய இராணுவத்தின் தென் பிராந்திய கட்டளைத் தளபதி இலங்கை வருகை?


இந்திய இராணுவத்தின் தென் பிராந்திய கட்டளைத் தளபதி லெப்.ஜெனரல் ஏ.கே.சிங் நான்கு நாள் பயணமாக இலங்கைக்கு வஜஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான இராணுவ ஒத்துழைப்புகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே இவ்விஜயம் இடம்பெறவுள்ளதாகவும் எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்புக்கு வருகை தருவார் என இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இவ்விஜயத்தின் போது, இலங்கையின் ஆயுதப்படைகளின் தளபதிகளையும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவையும் லெப்.ஜெனரல் ஏ.கே. சிங் சந்திப்பார் என்றும் இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும், இலங்கையில் உயிரிழந்த இந்திய அமைதிப்படையினரின் நினைவாக, கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்திலும் லெப்.ஜெனரல் ஏ.கே. சிங் வணக்கம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved