இலங்கைக்கு எப்போதும் ஜப்பான் ஆதரவளிக்கும் எனவும் எப்போது உதவி தேவைப்பட்டாலும் வழங்க தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஜப்பானிய அரசின் விசேட பிரதிநிதியான யசூஷி அகாஷி வலியுறுத்தியதாக, கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை, இலங்கை அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்படன் அழுல்படுத்த வேண்டும் எனவும் யசூஷி அகாஷி வலியுறுத்தியுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, யசூஷி அகாஷியை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜப்பான், இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான வலுவான உறவுகளின் முக்கியத்துவத்தையும் அகாஷி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுவரும் அபிவிருத்திகள் குறிப்பாக, வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் துரித அபிவிருத்திகள் குறித்து அகாஷிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விளக்கமளித்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.