
| அமெரிக்காவில் 10 லட்சம் இந்தியர்கள் வாக்குரிமை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
| தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் அமெரிக்காவில் குடியேறி இருப்பதாக கடந்த ஆண்டு (2010) அமெரிக்காவில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அவர்களில் இந்தியர்கள் மட்டும் 30 லட்சத்து 19 ஆயிரம் பேர் உள்ளனர். தெற்காசிய நாடுகளில் சீனர்கள் (30 லட்சத்து 79 ஆயிரம் பேர்) முதலிடத்தை பிடித்துள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக பிலிப்பைன்ஸ் நாட்டினர் (30 லட்சத்து 42 ஆயிரம் பேர்) 2வது இடத்தை பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்ததாக இந்தியர்கள் 3வது இடத்தை வகிக்கின்றனர். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் 10 லட்சம் பேர் வாக்குரிமையை பெற்றுள்ளனர். இந்தியர்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் உள்ள மெட்ரோபாலிட்டன் நகரங்களான நியூயார்க், சிகாகோ, வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் தங்கியுள்ளனர். |