.

Home » » கார்த்தி படத்தில் பிரகாஷ் ராஜ்! சூர்யா சொன்ன மாற்றம்!

கார்த்தி படத்தில் பிரகாஷ் ராஜ்! சூர்யா சொன்ன மாற்றம்!


கார்த்தி படத்தில் பிரகாஷ் ராஜ்! சூர்யா சொன்ன மாற்றம்!

ஷங்கர் தயால் இயக்கத்தில் கார்த்தி, ப்ரணிதா, சந்தானம் நடித்துக் கொண்டிருக்கும் படம் சகுனி. படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கிய போது தான் இந்த திருப்பம் ஏற்பட்டது. 


திடீரென சகுனி படத்தில் வில்லனாக நடித்த சலீம் கௌஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டு பிரகாஷ் ராஜ் சேர்க்கப்பட்டார். சலீம் கௌஸ் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா, கமல் நடித்த வெற்றிவிழா, விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர், விஜய் நடித்த வேட்டைக்காரன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர்.பிரகாஷ் ராஜ் கார்த்தியை வைத்து ரீ-ஷூட் ஹைதராபாத்தில் துவங்கிவிட்டது. 

சரி, படப்பிடிப்பு முடிந்த பின் ஏன் இந்த மாற்றம்? என்று விசாரித்தால் கார்த்தியின் தந்தை சிவகுமார் மற்றும் அண்ணன் சூர்யா ஆகியோரது விடாமுயற்சியின் பலன்தானாம் இது. படப்பிடிப்பின் ஆரம்பத்திலிருந்தே சலீம்-கார்த்தி இடையேயான காட்சிகளில் திருப்தி இல்லாத கார்த்தி குடும்பத்தினர் ஒருவழியாக நினைத்ததை சாதித்து விட்டனர் என்கின்றனர் படக்குழுவினர். 

பிரகாஷ் ராஜ் வில்லனாக தேர்ந்தெடுக்கப்பட்டதிற்கும் சூர்யாவின் சிபாரிசு தான் காரணமாம். 

Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved