தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குரலை சர்வதேசத்தில் நசுக்க வேண்டும் என்று கோரி தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலரும் போதி பூசை வழிபாடுகளை ஒழுங்கு பண்ணி நடத்தி வருகின்றார்கள்.
கண்டியில் உள்ள விகாரைகளிலும் இவ்வழிபாடுகளில் சில இடம்பெற்று இருக்கின்றன.
அமெரிக்க கொடி, புலிச் சின்னம் ஆகியவற்றுடன் பன்னர்களை வெளியிட்டு வீதிகளில் தொங்க விட்டு இருக்கின்றனர் பல அரசியல்வாதிகள்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த டிலும் அமுனுகம எம்.பியால் ஒழுங்கு பண்ணப்பட்ட போதி வழிபாடு குறித்த பன்னர் ஒன்று பேராதனையில் உள்ள வீதி ஒன்றில் தொங்குவதை படத்தில் காண்கின்றீர்கள்.

