.

Home » » அமீர்-கார்த்தி மோதல்! படப்பிடிப்பில் ரகளை!

அமீர்-கார்த்தி மோதல்! படப்பிடிப்பில் ரகளை!

கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் ஷூட்டிங் சென்னை விமான நிலையம் அருகே நடந்து வருகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கார்த்தியின் குடும்ப நண்பரான ஞானவேல்ராஜா.ஃபெப்சி பிரச்சனையால் தமிழ் சினிமாவில் தற்போது எல்லா படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரச்சனை முடிவுக்கு வரும் வரையில் எந்த படத்தின் படப்பிடிப்பிலும் பங்கேற்பதில்லை என ஃபெப்சி(திரைப்பட தொழிளாலர் சம்மேளனம்) முடிவு செய்துள்ளது.

அப்படி இருக்கிற நிலையில் கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் படப்பிடிப்பு மட்டும் தடைபடாமல் நடந்து வருவது ஃபெப்சி தொழிளாலர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரகளை ஏற்பட்டது. பிரச்சனை முடியும் வரை படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று தயாரிப்பாளரை ஃபெப்சி தொழிளாலர்கள் எச்சரித்தனர்.

இதுபற்றி தயாரிப்பு தரப்பில் விசாரித்த போது “ இயக்குனர் அமீரின் தூண்டுதலின் பெயரில் தான் எங்களுக்கு இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருகிறது” என்றனர். தயாரிப்பாளர்களுக்கும் ஃபெப்சி தொழிளலர்களுக்கும் பிரச்சினை நீடித்து வரும் நிலையில், தங்களது கோரிக்கையை நிறைவேற்றித் தரும் பொறுப்பை அமீரிடம் ஒப்படைத்திருக்கிறது ஃபெப்சி குழு.

அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிற்கும் ஏற்கனவே பருத்திவீரன் பட விவகாரத்தில் பகை உள்ள நிலையில், அமீர் தான் தனக்கு பிரச்சனை கொடுப்பதாக நினைக்கிறார் ஞானவேல்ராஜா.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved