.

Home » » சிரியா ராணுவத்தின் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவோம்: பிரிட்டன் மற்றும் அமெரிக்க பிரதமர்கள் உறுதி

சிரியா ராணுவத்தின் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவோம்: பிரிட்டன் மற்றும் அமெரிக்க பிரதமர்கள் உறுதி


பிரிட்டன் பிரதமர் கேமரூனும் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவுடனான சந்திப்பு  வாஷிங்டன் நகரில் நடைபெற்றது. பின்பு இருவரும் இணைந்து வாஷிங்டென்னிலுள்ள போஸ்ட் நாளிதழுக்கு அறிக்கை வழங்கினர்.
மூன்று நாட்கள் வருகையைாக அமெரிக்கா வந்திருந்த கேமரூன், ஜனாதிபதி ஒபாமாவைச் சந்தித்துப் பேசுகையில் ஆப்கானிஸ்தானில் அடுத்து நடக்க வேண்டிய மாற்றங்கள் குறித்துப் விவாதித்தனர்.

மேலும் ஈரானில் உள்ள அணுசக்தி நிலையப் பிரச்னை குறித்தும் சிரியாவில் நடைபெற்றுவரும் ராணுவ வன்முறை குறித்தும் பேசியுள்ளனர்.

இவ்விரு தலைவர்களின் பேச்சுவார்த்தை நேட்டோ மற்றும் G8 தலைவர்களின் கூட்டத்திற்கு முன்பு நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு கடந்த 2010ம் ஆண்டில் இரண்டு தலைவர்களும் சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் சந்திப்பு இரு நாடுகளின் பாரம்பரிய மரபு மற்றும் வரலாற்று மதிப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளது, மேலும் இரண்டு நாடுகளும் இதயத்தால் இணைந்துள்ளன என்பதை இந்த சந்திப்பு எடுத்துக்காட்டுவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தள்ளன.

நாங்கள் செய்யப்போகும் ஒவ்வொரு விடயத்தையும் நாங்கள் கவனித்துச் செய்கிறோம். உலகமும் எங்கள் கூட்டணியைக் கவனித்துக் கொண்டே இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வன்முறையை அடக்கியது, அல்கொய்தாவின் அட்டூழியங்களை ஒடுக்கியது, போன்றவை இரு ராணுவங்ளும் இணைந்து நடத்திய மிகப் பெரிய கடினமான பணியாகும்.

அந்த நாட்டில் நெட்டோ படையைச் சார்ந்த அமெரிக்க வீரர் ஒருவர் பதினாறு ஆப்கானியக் குடிமக்களைச் சுட்டுக்கொன்றதையடுத்து இந்த இரு தலைவர்களின் சந்திப்பும் நடந்திருக்கிறது. இரு நாட்டுப் படைகளும் அங்கு முழு அர்ப்பணிப்போடும் பணியாற்றி வருவதாகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவிலும் ராணுவம் அப்பாவிப் பொதுமக்களைக் கூட்டம் கூட்டமாகச் சுட்டுத்தள்ளுவதும் தீ வைத்துக் கொளுத்துவதும் ஏற்றுக் கொள்ள முடியாதது, எனவே ஜனாதிபதி ஆசாதையும் அவரது ராணுவத்தின் வன்முறையையும் இனியும் தொடர விட முடியாது என்று தலைவர்கள் இருவரும் கருத்து வெளியிட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved