ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் இன்று, இலங்கைக்கு எதிரான பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 22 அல்லது 23ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தப் பிரேரணை தோற்கடிக்கும் முயற்சிகளில் இலங்கை இராஜதந்திரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
மேலும், இலங்கைக்கெதிரான பிரேரணை விவாதத்திற்கு 47 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவொன்று இந்த சவாலை முறியடிக்கும் முயற்சிகளில் ஈடுபட உள்ளதாக சிங்கள பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 22 நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக புலிகளின் வலையமைப்பு அறிவித்துள்ளது எனவும் சுவிட்சர்லாந்து, இந்தியா, நோர்வே போன்ற நாடுகள் இதுவரையில் தமது நிலைப்பாட்டை உறுதியாக அறிவிக்கவில்லை எனவும் சிங்களப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.