.

Home » » ஐரோப்பாவை காப்பாற்ற வேண்டும்: நிக்கோலஸ் சர்கோசி(Nicolas Sarakozy)

ஐரோப்பாவை காப்பாற்ற வேண்டும்: நிக்கோலஸ் சர்கோசி(Nicolas Sarakozy)


பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி(Nicolas Sarakozy) பாரிஸ் நகரத்தில் வில்லெபிண்டே(VIllepinte) என்ற ஊரில் நடந்த மிகப்பெரிய பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில் ஐரோப்பாவை அதன் நிதி நெருக்கடியிலிருந்து காப்பதன் மூலமாக பிரான்ஸைக் காப்பாற்றலாம் எனக் கூறினார்.
ஐரோப்பியவின் வாழ்க்கை முறையைக் காப்பாற்றுவதற்கு முதலில் அவற்றின் எல்லைகளைப் பாதுகாக்க வேண்டும். ஐரோப்பா சார்ந்த தொழில்களை வளர்க்க வேண்டும் என்றார்.

மேடையில் பிரான்ஸ் நாட்டுக்கொடியுடன் ஐரோப்பிய ஒன்றியக் கொடியும் வைக்கப்பட்டிருந்தது. நிக்கோலஸ் ஜனாதிபதி பதவியிலிருந்த இந்த ஐந்தாண்டுகளில் ஐரோப்பா பிரான்ஸிற்கு வழங்கிய ஆதரவையும், ஐரோப்பாவின் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் பிரான்ஸ் எவ்வாறு பங்கு பெற்றது என்பதையும் மேடையில் விவரித்துப் பேசினார்.

பிரான்ஸ் தலைமைப் பொறுப்பை ஏற்க மறுத்தால் ஒரு பணியும் நடைபெறாது. அவ்வாறு பணிகள் முடக்கப்பட்டால் ஐரோப்பா உலக அரங்கில் தன் இடத்தையும், தகுதியையும் இழந்துவிடும். எதிர்காலத்தை நெறிப்படுத்தும் ஆற்றலை நாம் ஐரோப்பாவிற்கு வழங்க வேண்டும், என்று சர்கோசி விளக்கினார்.

சர்கோசி பிரான்சை விட அதிகமாக ஐரோப்பாவுக்காவே பாடுபடுகிறார் என்று எதிர்கட்சியினர் கருத்து தெரிவித்தனர். அதற்கு நிக்கோலஸ் பிரான்ஸ் மற்றவருக்காகப் போராடும் போது அது தனக்காகவும் போராடுகிறது என்பதை மக்கள் நினைவில் வைக்க வேண்டும் என்றார்.

ஷென்கென் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்றால், அடுத்த 12 மாதங்களில் அது காலாவதியாகிவிடும் என்று கூறினார்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved