.

Home » » அமெரிக்கா மீது இலங்கை அறிவிக்கப்படாத யுத்தம் ஒன்றை ஆரம்பித்ததா ?

அமெரிக்கா மீது இலங்கை அறிவிக்கப்படாத யுத்தம் ஒன்றை ஆரம்பித்ததா ?

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா இலங்கை மீது பிரேரணை ஒன்றைக் கொண்டுரவ கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது யாவரும் அறிந்ததே. பல உலக நாடுகள் இலங்கையைக் கை கழுவி விட்டுள்ள நிலையில், இந்தியாவும் மெளனமாக இருப்பதையே விரும்புவதாக புது டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந் நிலையில் தனது பலத்தைக் காட்ட சீனா நேரடியாகக் களமிறங்கியுள்ளது எனவும் அறியப்படுகிறது. இது இவ்வாறு இருக்க இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச, ஜீ மெயிலைப் பாவிக்கவேண்டாம் என இலங்கை மக்களுக்கும் அமைச்சர்களுக்கும் இன்று(13) வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க நிறுவனமான ஜி மெயில் மற்றும் கூகுள் போன்றவற்றை இலங்கையர் புறக்கணிக்கவேண்டும் என இவர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஏற்கனவே சீனாவில் கூகுள் தேடுபொறிக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. பின்னர் அப்பிள் நிறுவனத்தையும் முடக்கிய சீனா, பேஃஸ்புக், ஜீ மெயில் போன்றவற்றின் பாவனையையும் முடக்கியது. இதனை ஒரு முன் உதாரணமாகக் கொண்டு, இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச தற்போது, தடாலடியாக இவ்வறிவித்தலை விடுத்துள்ளார். இது அமெரிக்கா மீது இலங்கை அறிவிக்காத போர் ஒன்றைத் தொடுத்துள்ளதைக் காட்டுவதாக கொழும்பில் இருந்துவரும் செய்திக் குறிப்புகள் மேலும் தெரிவித்துள்ளன. 
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved