இலங்கையில் சுதந்திர தமீழத்தை அமைக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைகின்றதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு குற்றஞசாட்டியுள்ளது.
ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எதிரான பரப்பரையை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழினத்தின் மீதான இலங்கை அரச பயங்கரவாதமாக, கட்டவிழ்த்தப்பட்ட கொடியயுத்தத்தில், இலங்கை மீது போர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தனது கோபத்தை கொட்டித் தீர்த்துள்ளது.
ஆயுதப்போராட்டம் தோற்றவுடன், சனநாயக போராட்டப் பாதையில் செல்வதற்காக தொடங்கப்பட்டதுதான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்றும், தமிழீழ அரசாங்கத்தின் பிரதான நோக்கம் வெளிநாட்டு அரசுகளின் கவனத்தை வாங்கி இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஒரு சுதந்திர தமிழீழத்தை அமைப்பதாகும் என்றும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

நா.த.அரசாங்கமானது தமிழர்கள் அதிகமாக வாழும் மேலைத்தேசங்கள் பலவற்றில்,காரியாலயங்களைத் திறந்து பல இடங்களில் காலூன்றியுள்ளதாகவும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனை இலக்கு வைத்து பரப்புரைகளை சிறிலங்கா மேற்கொண்டு வரும் நிலையில், சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையத்தளமானது நா.த.அரசாங்கத்தின் துணை சபாநாயகர் சுகன்யா புத்திசிகாமணி அவர்கள் மீதும் இலங்கை அரசுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை போனவர் என வர்ணித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளச் செய்தி