.

Home » » இந்திய மைய அரசியலில் மையங்கொண்டுள்ள தமிழீழ விவகாரம்

இந்திய மைய அரசியலில் மையங்கொண்டுள்ள தமிழீழ விவகாரம்


அமெரிக்காவினால் ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்ற குரல், தமிழகமெங்கும் ஒங்கி ஒலித்து வந்த நிலையில், தற்போது இந்திய மைய அரசியல் வட்டத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்திய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மட்டுமல்ல, இந்திய மைய ஊடகங்களிலும் சிறிலங்கா விவகாரம் முக்கிய விவகாரமாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியான யில்ஐ.நா மனித உரிமைச் சபையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதனை மையமாக கொண்டு காரசாரமான விவாதமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.


மறுபுறம் எந்‌தவொரு நாட்டுக்கும் எதிரான தனிப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்காது என்றும், சிறிலங்கா விவகாரத்தில் இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நடாளுமன்ற கீழவையில் தெரிவித்துள்ள கூற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனீவாப் பிரேரணையை ஆதரி எனும் முழக்கம் நேற்றைய இரு அவைகளுக்குமான இந்திய நாடாளுமன்ற அமர்வில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று செவ்வாய்கிழமை (13-02-12) இரு அவைகளும் பரபரப்புடன் தொடங்கியது.



ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில், இந்திய அரசின் நிலை என்ன என்று விளக்கமளிக்க வேண்டும் என்றும், சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் திமுக., அதிமுக பாஜக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரல் எழுப்பியுள்ளன.

திமுக தரப்பில் திருச்சி சிவா, அதிமுக எம்.பி. மைத்ரேயன், கொங்கிரஸ் தரப்பில் ஞானசேகரன், இடதுசாரிகள் தரப்பில் டி.ராஜா, பாஜக தரப்பில் வெங்கைய்யா நாயுடு ஆகியோர் சிறிலங்காவின் போர் குற்றங்கள் குறித்து எடுத்துரைத்ததோடு தொடர்சியான குரலை அவையில் எழுப்பினர்.

கொங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஞானதேசிகன், ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர்சியான ழுழக்கங்களால் பதிலுரைத்த நாடாளுமன்ற விவகார அமைச்சர் பவன்குமார் பன்சிலால், இது குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் விபரங்களை கேட்டுள்ளேன்.

அறிக்கை வந்ததும் அரசு முழு விவரம் அளிக்கும். மேலும் ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானம் எத்தகையது என்ற விபரம் இன்னும் அறியப்படவில்லை என்றார்.

இந்தப் பதிலினால் திருப்தியடையாத தமிழக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பியதால், இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.

மதியம் சபை கூடியபோது, மேல்சபையில் தொடர்ந்து அமளி நீடித்து.

இதையடுத்து சிறிலங்கா விவகாரம் தொடர்பாக நாளை வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அறிக்கை சமர்ப்பிப்பார் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பவன்குமார் பன்சிலால் அறிவித்தார்.

எனினும் தொடர்ந்து குழுப்பம் நிலவியதால் மாலை வரை சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை
நாடுகடந்த தமிழீழ அரசங்கம்
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved