வடக்கு மற்றும் கிழக்கில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இருப்பதாக அண்மையில் சில தகவல்கள் வெளியாகியிருந்தன. குறித்த பகுதிகளின் உள்ளார்ந்த பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடைமுறைகளையும்...
படையினர் மேற்கொண்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது.
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கில் தற்போது உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவலாக வெளிவந்திருந்தன. இருப்பினும் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. கிழக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறு அநாவசியமாக வெளிவரும் செய்திகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ளார்ந்த பாதுகாப்புகளில் இராணுவமும் காவல்துறையினரும், செயற்பட்டு வருகின்றனர்.
இதற்கு மத்தியில் புலிகளது செயற்பாடுகள் நடைபெறுகின்றது என்ற செய்தி பொய்யானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.