.

Home » , » நித்தியானந்தா மீதான மோசடி வழக்கு: அமெரிக்க நீதிமன்றம் இன்று தீர்ப்பு

நித்தியானந்தா மீதான மோசடி வழக்கு: அமெரிக்க நீதிமன்றம் இன்று தீர்ப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த பொபட்லால் சாவ்லா என்பவர் 2005 முதல் 2010 வரை சுவாமி நித்தியானந்தாவின் சீடராக இருந்தார்.
அப்போது கலிபோர்னியா மாகாணத்தில் வேதப் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்குவதற்காக நித்தியானந்தா பவுண்டேஷன் நிறுவனத்திற்கு ரூ.9.35 கோடி நன்கொடையாக அளித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை ரஞ்சிதாவுடனான விவகாரம் வெளிவந்த பின்னர், ஆசிரமத்தை விட்டு வெளியேறிய சாவ்லா, தான் கொடுத்த நன்கொடையைத் திருப்பித் தரும்படி கலிபோர்னியா மாகாணத்தின் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கில் கடந்த 2ஆம் திகதி இறுதி விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், நித்தியானந்தா பவுண்டேஷன் ஒரு மோசடி நிறுவனம் என்றனர்.

பாதிக்கப்பட்ட பொபட்லால் சாவ்லாவுக்கு நித்தியானந்தா பவுண்டேஷன் ரூ.8.63 கோடியை திருப்பி அளிக்க வேண்டும் என்றனர்.

இவ்வழக்கில், பவுண்டேஷன் மீதான அபராதம் பற்றிய இறுதித் தீர்ப்பு இன்று வெளியாகின்றது. இந்த அச்சத்தில் சுவாமி நித்தியானந்தாவும் அவரது சீடர்களும் உள்ளனர்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved