வீர தீர செயல் புரியும் சிறுவர், சிறுமிகளுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி விருது வழங்கப்படுகிறது.
கடந்த 1957-ம் ஆண்டில் இருந்து இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 1957-ம் ஆண்டில் இருந்து இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டுக்கான (2011) இவ்விருதுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்க பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர், 24 பேரை வீர தீர செயல் விருதுக்கு தேர்வு செய்துள்ளனர்.
விருது பெறுபவர்களில் தமிழகத்தை சேர்ந்த சிறுவன் ஜி. பரமேஸ்வரன், கேரளாவை சேர்ந்த சசாத், அன்ஷிப், கர்நாடகாவை சேர்ந்த சிந்துஸ்ரீ, சந்தேஷ் ஹெக்டே ஆகியோரும் அடங்குவார்கள்.
விருது பெறுபவர்களில் தமிழகத்தை சேர்ந்த சிறுவன் ஜி. பரமேஸ்வரன், கேரளாவை சேர்ந்த சசாத், அன்ஷிப், கர்நாடகாவை சேர்ந்த சிந்துஸ்ரீ, சந்தேஷ் ஹெக்டே ஆகியோரும் அடங்குவார்கள்.