நியாயமாக ஒரு பாடல் ஹிட்டானால் அதற்கான பெருமை இசையமைப்பாளரையே சாரும்.ஆனால் "ஒய் திஸ் கொல வெறி...!" பாடல் ஹிட்டடித்ததற்கான முழு பெருமையை அதை பாடி நடித்த தனுஷே தட்டிக் கொண்டுபோய்விட,நடக்கும் அலப்பறைகளை பார்த்து அதற்கு இசை(?) அமைத்த அனிருத் பரிதாபமாக முழித்துக்கொண்டிருந்தார்.
சரி "கொல வெறி" பாடலுக்கான கிரெடிட்தான் கிடைக்கவில்லை;படத்தின் டைட்டில் மியூசிக்காவது பெயர் பெற்று தரும் என நினைத்து மிகவும் கஷ்டப்பட்டு(?!) ஒரு டியூனை போட்டுள்ளார்.
ஆனால் அவர் அத்தனை கஷ்டப்பட்டது " தி கிளாசிக்" என்ற கொரிய படத்தில் வந்த ஒரு ட்யூன்தான் என்பதை இணையதள எமகாதர்கள் கண்டுபிடித்து, அதனை ஏற்றிவிட்டனர்.
முதல் படத்திலேயே அனிருத் உழைத்த(!)உழைப்பின் மகத்துவத்தை இதோ கேளுங்கள்...!