.

Home » » யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடம் கிளிநொச்சியில்!

யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடம் கிளிநொச்சியில்!


யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை கிளிநொச்சியில் அமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கிளிநொச்சியின் அறிவியல் நகரில் யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய பீடம் என்பன இயங்கவுள்ளன. இதற்கான அமைச்சரவை பத்திரத்தை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க சமர்பித்திருந்தார்.
இந்நிலையில், கிளிநொச்சியில் பொறியியல் பீடத்திற்கான கட்டடத்தை புனரமைப்பு செய்ய 393.79 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பொறியியல் பீடம் அமைக்க வசதி செய்து கொடுக்கப்படும் என உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved