.

Home » » விடுதலையாகிறார் சரத் பொன்சேகா

விடுதலையாகிறார் சரத் பொன்சேகா

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சுதந்திர தினத்தன்று நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனவே, குறித்த காலம் வரையில் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தக் கூடாது என சரத் பொன்சேகா ஆதரவாளர்களிடம் டிரான் அலஸ் கோரியுள்ளார்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் நோக்கில் பல அமைப்புக்கள் பாரியளவில் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டிருந்தன.
எனினும், எதிர்வரும் பெப்பரவரி மாதம் 4ம் திகதி வரையில் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தாது அமைதியை பேணுமாறு டிரான் அலஸ், சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரியுள்ளார்.
சுதந்திர தினத்தன்று சரத் பொன்சேகா நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படாவிட்டால் மறு தினமே பாரியளவில் போராட்டங்களை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved