மன்னார் திருக்கேதீஸ்வரத்திற்க்கு அண்மையாக பௌத்த ஆலயம் நிர்மாணிக்க பட்டுள்ளமையால் அங்கு வாழும் மக்களிடையே பெரும் அச்ச நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவுடன் இரவாக சுமார் 1500 கிலோ நிறையுடய வெண்கலத்திலான புத்தர் சிலை படையினரால் கொண்டு வந்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் போயா தினமான நேற்றைய முன்தினம் பிரித்தோதி புத்தர் கோவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தனியார் காணியில் நிலை கொண்டுள்ள படையினர் தமது வழிபாட்டுக்காக சிறியளவிலான் புத்தர் சிலை ஒன்றினை வைத்து வழிபாட்டில் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்நிலையில் தற்போது திடீரென பாரிய புத்தர் சிலையை வைத்து பௌத்த ஆலயத்தை நிர்மாணித்துள்ளதுடன் பொலிஸ் மற்றம் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் குறித்த புத்தர் சிலையை பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தக்ககரையான பாலாவிக்கு அண்மையாக இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை இந்து மக்களிடையே பெரும் அச்ச உணர்வையும் பயப் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்தப் பகுதியில் பௌத்த மத்ததவர்கள் யாரும் வாழாத நிலையில் இத்தகைய பௌத்த ஆலயத்தை படையினர் கட்டியுள்ளமையும் மற்றும் தனியார் காணியை அத்து மீறிப் பிடிக்கும் நடவடிக்கைகளும் தி்ட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அரசினால் மேற்கொள்வதற்கான முன்செயறபாட்டு நடவடிக்கையாக மக்கள் பார்க்கின்றார்கள்.
மன்னார் பிரதேச செயலகத்திற்க்கு உட்பட்ட இந்தப் பகுதயில் புதிய மத வணக்க ஸ்தலங்கள் கட்டுவதாக இருந்தால் பிரதேச செயலகம் மற்றும் கலாச்சார அமைச்சின் முன் அனுமதி பெற வேண்டும் என்று அரசு சுற்று நீரூபம் மூலம் அரச அதிபாகள், பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்திருந்த போதிலும் இந்த நடவடிக்கைகள் கூட உரிய முறையில் பின்பறறப்படவில்லையென்பதும் இதற்க்காகவே அரசாங்கம் ஏற்க்கனவே திட்டமிட்ட முறையில் தமிழ்மக்கள் அதிகம் செறிந்து வாழும் பிரதேசத்திற்க்கு சிங்கள் அரசாங்க அதிபரை நியமனம் செய்தது எனவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.