எந்தவொரு துறையிலும் தேசிய கொள்கையில்லாத ஒரே நாடு இலங்கை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கல்வித்துறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. இஸட் புள்ளி குளறுபடிகளினால் மாணவர்கள் பெரும் அசௌரியங்களை எதிர்நோக்கினர்.
முக்கிய துறைகளில் தேசியக் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக கல்வி உள்ளிட்ட துறைகள் தொடர்பில் தேசிய ரீதியான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.
எந்தவொரு துறைக்கும் தேசிய ரீதியாக கொள்கை வகுக்கப்படாத ஒரே நாடாக இலங்கை திகழ்கின்றது என அர்ஜூன தெரிவித்துள்ளார்.
பாணந்துறை பிரதேச பாடசாலை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.