.

Home » » ஐ.நாவிடம் ஓரணியில் உரத்து கேட்போம் வாரீர்! 5ஆவது நாளாக தொடர்கின்றது

ஐ.நாவிடம் ஓரணியில் உரத்து கேட்போம் வாரீர்! 5ஆவது நாளாக தொடர்கின்றது


ஈழத் தமிழர்களின் விடிவிற்காக பெல்ஜியத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி 5ஆவது நாளாகவும் கடுமையான குளிரினையும் பொருட்படுத்தாது நடைப்பயணம் தொடர்கின்றது.
எந்த வித விசாரணைகளும் இன்றி நீண்டகாலமாக சிறிலங்கா அரசாங்கம் தடுத்துவைத்துள்ள அப்பாவித் தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இவர்களின் பாதங்கள் ஐ.நாசபையினை நோக்கி விரைகின்றது.
ஈழத் தழிழர்கள் இலங்கைத் தீவில் சுபீட்சத்துடன் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக, கடந்த 30வருடமாக பல்வேறுவிதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவையாவும் மழுங்கடிக்கப்பட்ட நிலையில் நிற்கதியாய் நிற்க்கும் ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவேண்டும் என்று இந்த மூவரும் மேற்கொள்ளும் நடைப்பயண அகிம்சை போராட்டத்தில் அவர்கள் முன்வைத்துள்ள ஐந்து அம்ச கோரிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபை செவிமடுத்து உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என்று புலத்திலும் தமிழர் தாயகத்திலும் வாழுகின்ற அனைத்து தமிழர்களும் பேரவாவுடன் எதிர்பார்த்து நிற்கின்றனர்.
எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி ஐ.நா சபைமுன்றலில் முற்றுப் பெறுகின்ற நடைப்பயணத்தில் புலத்தில் வாழுகின்ற அனைத்து தமிழ் உறவுகளும் அலை அலையாய் திரண்டு வாரீர் ஐநாவிடம் நீதி கேட்போம்.
நீதிக்கான பயணத்தில் கலந்துகொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நாடுகள் ரீதியாக ஒருங்கிணைப்பு குழுவினரால் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே தாங்கள் தொடர்பு கொண்டு தமிழின அழிப்பை மேற்கொண்டவர்களுக்கு தண்டனையும் ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர தீர்வையும் பெற்றுக்கொடுக்குமாறு ஐ.நா சபையிடம் ஓரணியில் உரத்து கேட்போம் வாரீர்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved