சிறிலங்காவின் 64 ஆவது சுதந்திர தினத்தை கண்டித்து கவனயீர்ப்புக் கண்காட்சி டென்மார்க் கொல்பேக் (Holbæk) நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது. ஈழத்தமிழர்கள் இன்றும் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர் என்பதனை டென்மார்க் மக்களுக்கு இந்தக் கண்காட்சி எடுத்துக்காட்டுகிறது.
சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளையும்‚ ஆக்கிரமிப்புகளையும் தாங்கி நிற்கும் இக்கண்காட்சியை டெனிஸ் மக்கள் ஆர்வத்தோடு பார்வையிட்டனர். மேலும், சனல் 4 இல் வெளிவந்த கொலைக்களம் தொகுப்பு அடங்கிய ஒளித்தட்டுகள் (சி.டி) டெனிஸ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.