தமிழீழ தேசத்தின் நங்கை பாமினி அவர்களின் வரியில் ஈழத்தின் அழகையும் ஈழத்தின் உணர்வையும் அழகாக செதுக்கி எமது உள்ளத்தின் உள்ளக்கிடக்கைகளை நெகிழும்படி பாடலாக்கி உள்ளார் !
அந்த தோழியின் முயற்சிக்கும் ஆளுமைக்கும் எமது வாழ்த்துக்கள் என்றும் !
தமிழீழத்தில் முள்வேலிக்குள் முடங்கி கிடக்கும் உறவுகள் ஆக இருக்கட்டும் உலகத்தின் அனைத்து
பகுதிகளிலும் ஏதிலிகளாக பரந்து வாழும் எம் உறவுகளாக இருக்கட்டும் தமிழீழ தேசத்தின் விடிவை நினைத்து நினைத்து கண்ணீர் வடிப்பவர்களாக தான் இருகின்றனர் அந்த வகையில் தான் இந்த புரட்சிப் பாடலும் இந்த தோழியால் வடிவமைக்கப் பட்டுள்ளது !
எம் தமிழீழத்து இளைய தலைமுறையினரின் திறமையை உலகுக்கு வெளிக் கொண்டுவருவது
அனைத்து தமிழ் ஊடகத்தின் கடமையாகும் என்பதை இந்த நேரத்தில் கூற கடமைப் பட்டுள்ளோம்
இந்த பாடலின் வரிகளுக்கு சொந்தமான தோழி பாமினி அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
ஈழத்தின் சிறுத்தைகள் ஈழம்போய்ஸ்