எல்லைப் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் குறித்து இந்தியாவிற்கு கவலை ஏற்பட்டுள்ளதால், சீனாவுடனான மோதலுக்கு இந்தியா தயாராகி வருகிறது என அமெரிக்க உளவுத்துறை அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார். |
வெளிப்படையான அறிவிப்புகள் இந்தியா, சீனா இடையேயான பதற்றத்தை தணித்திருந்தாலும், தங்களது எல்லைப் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் குறித்து இந்தியாவின் கவலை அதிகரித்துள்ளதாக நாங்கள் மதிப்பிட்டுள்ளோம் என்று தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர் தெரிவித்தார். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே உடனடியாக பெரிய அளவில் போர் நிகழாது என்று இந்திய இராணுவம் நம்புகிறது. எனினும் எல்லைப் பகுதியில் சிறிய அளவிலான மோதலுக்காக தயார்படுத்த இந்தியா தனது படைகளை வலுப்படுத்தி வருகிறது என ஜேம்ஸ் கூறினார். |