ரஷ்யாவில் சைபீரியா பகுதியைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மரியா புக்துயேவா ஒரே நிமிடத்தில் ரஷ்யா முழுவதும் பிரபலமாகி விட்டார்.
இதற்கு காரணம் மறைந்த ரஷ்ய தலைவர் லெனின் உடல், சுமார் 90 ஆண்டுகளாக புதைக்காமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த உடலை புதைப்பது பற்றி தற்போது ஒரு விவாதம் நடந்து வருகிறது.
இதை சுட்டிக்காட்டிய அந்த செய்தி வாசிப்பாளர், புதினை புதைக்கலாமா? இதுபற்றி இணையதளம் எங்கும் விவாதிக்கப்பட்டு வருகிறது என்று தொலைக்காட்சியில் கூறினார். அதாவது லெனின் என்று கூறுவதற்கு பதிலாக, தற்போதைய ரஷ்ய பிரதமர் புதின் பெயரை கூறிவிட்டார்.
ஏற்கனவே புதினுக்கு எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் அவரது பேச்சுக்கு ரஷ்யா முழுவதும் ஆதரவு உருவாகி அவர் ஒரு நிமிடத்தில் புகழ் பெற்று விட்டார்.
ஆனால் அந்த பெண் செய்தி வாசிப்பாளரோ வாய் தவறி அப்படி கூறிவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.