தனது நீண்ட நாள் காதலர் ஷிவ் கரண் சிங்கை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்கிறார் நடிகை ரீமா சென்.
ஷிவ் கரண் சிங்குடனான ரீமாவின் காதலை மீடியா வெளிச்சத்துக்கு கொண்டு வந்த போதெல்லாம் அப்படி எல்லாம் எதுவுமில்லை என மீடியா மீது கோபப்பட்டார் ரீமா சென். முற்றினால் கத்திரிக்காய் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்? இதோ வந்துவிட்டது.
ஷிவ் கரண் சிங்குக்கும் தனக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை மறுத்த ரீமா சென் தற்போது அதனை ஒத்துக் கொண்டிருக்கிறார். மேலும் மார்ச் 11ஆம் தேதி தங்கள் திருமணம் டெல்லி புறநகரில் உள்ள ஷிவ் கரண் சிங்கின் பண்ணை வீட்டில் நடக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஷிவ் கரண் சிங் பல ஸ்டார் ஹோட்டல்களின் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.