பிரச்சினைகளுக்கு தீர்வு காண இறக்குமதி செய்யப்பட்ட தீர்வுகள் அவசியமில்லை. பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, வெளிநாடுகளின் ஆதரவு பெற்றுகொள்ளப்படவில்லை. வெளிநாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் தலையீடு இல்லாத காரணத்தினால் போரை வெற்றிகொள்ள முடிந்தது.
மனித உரிமை மேம்பாடு தொடர்பில் எந்தவொரு நாடும் இலங்கைக்கு போதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை வெற்றிகாண எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம்.
பேதங்களைக் களைந்து அனைத்துத் தரப்பினரும் வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு எதிராக போராட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.