கனடாவில் கல்விக்கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய கன்கார்டியா பல்கலைகழக மாணவர்கள் 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தை மாநிலம் தழுவிய போராட்டமாக நடத்த வேண்டுமென்று மாணவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த போராட்டம் குறித்து கன்கார்டியா பல்கலைகழக மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சாட் வால்காட் கூறுகையில், கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து நாங்கள் தெருவில் இறங்கி போராடிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
ஆனால் மொன்றியல் மாணவர்கள் கல்விக் கட்டண உயர்வு குறித்து கூறுகையில், கல்விக்கட்டணத்தை வெகுநாட்களாக உயர்த்தாமல் இருந்து தற்போது உயர்த்தி உள்ளனர். இருப்பினும் கியூபெக் மாகாணத்தில் தான் மிகக் குறைந்த கல்விக்கட்டணம் என்றனர். மேலும் கல்விக் கட்டண உயர்வை தவிர்க்க இயலாது என்றும் கூறினர்.