பிரபல பொப்பிசைப் பாடகி மாயா அருள்பிரகாசத்துக்கும் சி. என். என் செய்தியாளர் அன்டர்சன் கூப்பருக்கும் இடையில் நிலவி வந்த முரண்பாடு முடிவுக்கு வந்து உள்ளது. இருவரும் ருவிட்டர் சமூக இணைப்புத் தளம் ஊடாக பரஸ்பரம் தொடர்புபட்டு அபிப்பிராய பேதங்களை களைந்து கொண்டனர். மாயா அருள்பிரகாசத்தை தமிழ் பெண் புலி என்று அன்டர்சன் வர்ணித்து இருக்கின்றார் போலும். இலங்கை அரசால் அன்டர்சன் விலைக்கு வாங்கப்பட்டு விட்டார் என்று மாயா பதிலுக்கு தாக்குதல் நடத்தி வந்து இருக்கின்றார்.
இந்நிலையில் இருவருக்கும் இடையிலான பனிப் போர் நீண்ட காலமாக இடம்பெற்று வந்து இருக்கின்றது. ருவிட்டர் ஊடாக கடந்த புதன்கிழமை தொடர்புபட்ட இருவரும் பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறி அபிப்பிராய பேதங்களை களைந்து கொண்டனர். சனல் 4 இன் இலங்கையின் கொலைக்களம் வீடியோவை அன்டர்சன் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று இத்தொடர்பாடலின்போது மாயா கேட்டு இருக்கின்றார்.