கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிவுகளின் அடிப்படையில் பயங்கரவாதிகளுக்கு நட்டஈடு வழங்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
உலகின் எந்தவொரு நாட்டிலும் பயங்கரவாதிகளுக்கு நட்டஈடு வழங்கப்படவில்லை.
ஆணைக்குழுவின் 250 முன்மொழிவுகளில், உயிரிழந்த மற்றும் காயமடைந்த புலிகளின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்பதும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் இந்த நாட்டுக்கு 50 பில்லியன் ரூபாவிற்கும் மேல் நட்டம் ஏற்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் இந்த முன்மொழிவானது எல்லை மீறியதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.