.

Home » » ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது:-விடுதலைப் புலிகள்

ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது:-விடுதலைப் புலிகள்


எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது. எமது பிரச்சனைகளையும் அரசியல் வேட்கையையும் செவிமடுத்துக் கேட்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கு நாமே பல்வேறு செய்திகளையும் முரண்பட்ட தீர்வுகளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நிலை எமக்குப் பாதகமாகவே அமையும்.
உலகத்தின் கவனம் இன்று எமது மக்கள் மீது திரும்பியிருக்கும் நிலையில் எமக்கான தீர்வாக நாமனைவரும் ஒரேவிடயத்தை அனைத்துலகச் சமூகத்துக்குச் சொல்ல வேண்டும்.

இதுவே ஆரோக்கியமான வழிமுறையாக அமையும் என தமிழர் இனவழிப்பு நினைவுநாளை முன்னி்ட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:

அன்பான தமிழ் மக்களே,

இலங்கைத் தீவிலே தமிழர் தேசத்தின் மீது காலங்காலமாக அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என எம்மால் நினைவு கொள்ளப்படுகின்றது.

ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங்கி நடாத்திக்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா அரசுதரப்பு படிப்படியாக மீறிக்கொண்டிருந்த நிலையிலும், தமிழ்மக்கள் வேண்டிநின்ற அரசியல் தீர்வைப் பெறுவதற்கான எந்தவொரு முயற்சியையும் சிறிலங்கா அரசுதரப்பு செய்யாமல் காலத்தை வீணடித்துக்கொண்டிருந்த நிலையிலும், பன்னாட்டுச் சமூகம் காட்டிய மெளனத்தை சிங்கள ஆட்சியாளர்கள் சாதகமாக்கிக் கொண்டு தமிழ்மக்கள் மேல் கொடிய போரைத் தொடுத்தார்கள்.

தென்தமிழீழத்தில் வெளிப்படையாகத் தொடங்கிய போர் தமிழரின் பூர்வீக நிலங்களெங்கும் விரிந்தது. சிறிலங்காப் படையினரின் வல்வளைப்புக்கள் விரிவடைந்து தமிழரின் நிலங்களை கையகப்படுத்தியது.

எமது மக்கள் தமக்கான பாதுகாப்பைத் தேடி ஆயிரமாயிரமாக இடம்பெயர்ந்தார்கள். இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி, மருத்துவ உதவியின்றி மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இத்தகைய மனித அவலங்கள் எதனையும் கருத்திற் கொள்ளாது தொடர்ச்சியான விமானத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள், போர் நெறிகளுக்கு மாறான கொத்துக்குண்டுத் தாக்குதல்கள், இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்கள் எனச் சிங்கள அரச படைகளினால் திட்டமிட்டுப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.

பன்னாட்டு ஆதரவுடன் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதானச் சூழலை ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட சிங்கள அரசின் கொடிய போரைத் தடுக்க பன்னாட்டுச் சமூகம் சரிவரச் செயற்படவில்லை.

மாறாக சிலநாடுகள் தமிழ்மக்களுக்கெதிரான கொடிய இனவழிப்புப் போருக்குப் பக்கபலமாக நின்றன. எமது மக்கள் புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று நீதிகேட்டு நடாத்திய போராட்டங்களைக் கண்டுகொள்ளாது இனவழிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உலகம் அப்போது நீதியின் வழியில் நடக்கவில்லை.

தொண்டு நிறுவனங்கள் உட்பட நடுநிலையான அமைப்புக்களையோ சுதந்திரமான ஊடகவியலாளரையோ அனுமதிக்காது தன் கொடுமைகளை உலகம் அறியாது இருக்க இருட்டடிப்புச் செய்துகொண்டு மிகப்பெரும் காட்டுமிராண்டித்தனத்தைத் தமிழர்மீது கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு.

இறுதியில் நவீன மானுடவரலாறு கண்டிராத மாபெரும் அழிவொன்றை முள்ளிவாய்க்காலில் ஏற்படுத்தி ஓய்ந்தது.

தாயகத்தில் சிங்கள இனவாத அரசின் கொடூரமான போர் முடிந்து மூன்றாண்டுகள் நிறைவடையும் இந்நேரத்தில் பன்னாட்டுச் சமூகம் சிறிலங்கா மீது சிறிதளவேனும் அழுத்தமாகச் செயற்படத் தொடங்கியுள்ளது.

உலக நாடுகளின் உதவியுடன் சிறிலங்கா அரசு மூர்க்கத்தனமாக தமிழ்மக்கள் மீது தனது போரைத் திணித்திருந்தது எனவும் ஐக்கிய நாடுகள் சபை தமிழ்மக்களின் உயிரிழப்புக்களைத் தடுக்கத் தவறியுள்ளது எனவும் பன்னாட்டு ஊடகங்கள், மனித உரிமை அமைப்புக்கள் பகிரங்கமாகவே தமது விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நடந்துமுடிந்த ஐக்கிய நாடுகள் சபையின் 19ஆவது மனித உரிமை கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

பன்னாட்டுச் சமூகம் சிறிலங்கா அரசுமீது அழுத்தத்தைக் கொடுக்க முற்படும் இச்செயற்பாடு கொடிய இனவழிப்பை எதிர்கொண்டு நிற்கும் எமது தமிழினத்துக்கு ஓரளவு ஆறுதலைத் தந்துள்ளது.

எனினும் தமிழ்மக்கள் வேண்டி நிற்கும் விடுதலையும் உரிமைகளும் இத்தீர்மானத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பதோடு தமிழர்களுக்குப் பாதகமான பல அம்சங்களையும் கொண்டுள்ளது என்பதை வேதனையோடு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இனவழிப்பை நிகழ்த்தியவர்களே நடாத்திய கண்துடைப்பு விசாரணை அறிக்கையை முதன்மைப்படுத்தி அதன்வழியே தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வழிமுறையை முன்மொழியும் இத்தீர்மானம் எமது மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்காது.

குறிப்பிட்ட விசாரணை அறிக்கையை தளத்திலும் புலத்திலும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் ஏற்கனவே நிராகரித்திருந்தனர் என்பதையும் பன்னாட்டுச் சமூகம் நினைவிற்கொள்ள வேண்டும்.

சிறிலங்கா அரசின் கட்டமைப்புக்குள்ளேயே உள்ளகப் பொறிமுறையொன்றை தமிழர்களுக்குரிய அரசியல் தீர்வாகப் பரிந்துரைக்கும்
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved