இன்று தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனுக்கான இடத்திற்கு முயற்சி செய்பவர் பவர் ஸ்டார் சீனிவாசன்.
இவர் நடித்து வெளிவந்த லத்திகா திரைப்படம் 200 நாட்களை கடந்தும் சென்னையில் பவர் ஸ்டார் ரசிகர்களுக்காகவே திரையிட்டு வருகிறார்கள்.
தன் ரசிகர்களுக்காகவே தன் நடிப்பில் வெளியான லத்திகாவைத் தொடர்ந்து ஆனந்த தொல்லை, மன்னவன், திருமா, தேசிய நெடுஞ்சாலை, மூலக்கடை முருகன் என வரிசையாக என்று படங்களில் நடித்து வருகிறார்.
பவர் ஸ்டார் சீனிவாசன் புதிதாக டிவிட்டர் இணையத்தில் இணைந்துள்ளார். நவம்பர் 7 ஆம் திகதி டிவிட்டர் இணையத்தில் இணைந்துள்ள இந்த பவர் ஸ்டாரை ரசிகர்கள் வரவேற்று தனது விமர்சனங்களை வாரி வழங்கி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பல்வேறு வேலைகளுக்கு இடையிலும் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் இணையத்தில் பதிலளித்து வருகிறார்.
டிவிட்டர் இணையத்தில் இவரை பற்றி பதிந்து இருக்கும் சில பஞ்ச் வசனங்கள்
* உங்களை நடிகர் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் கமல் மாதிரி ஒரு பன்முக கலைஞன்.
* வணக்கம் தலைவா.. நான் உங்களின் தீவிர ரசிகன். எல்லாரும் உங்களின் படத்தை தான் பார்ப்பாங்க. ஆனால் நான் உங்க பட போஸ்டரை 3 மணி நேரம் பார்ப்பேன்.
* ஓஸ்கர் விருது குழுக்களையும் உங்களது லத்திகா படம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
* சார் உங்களது அடுத்த படத்தில் நீங்கள் 6 பேக்கில் நடிக்கணும்.
* தலைவா உங்கள் முகத்தில் 10 அஜீத், 23 விஜய், 4 கமல் சாயல் இருக்கு 2016ல் நீங்க தான் முதல்வர்.
* நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரணும். நீங்க வந்தாதான் பவர் கட் பிரச்சினை சரியாகும்.
* தலைவா உங்களுக்கு இருக்கிற அழகுக்கு நீங்கள் ஆங்கில படத்தில் கூட நாயகனாக நடிக்கலாம்.
* வானத்துல இருக்கு பல ஸ்டார் ஆனால் இந்த டிவிட்டருக்கு ஒரே ஸ்டார் எங்க பவர் ஸ்டார்.
* தீபாவளின்னா சரவெடி, எங்க பவர் ஸ்டார்னா அதிரடி.